Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை ; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவும் சாம்பல்!

இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கம் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது.

இந்த எரிமலை எரித்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது.

ஹேலி குப்பி எரிமலை கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்துள்ளது.

இந்நிலையில், திடீரென வெடித்து சிதறி எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி, தற்போது வடக்கு அரேபிய கடல் பகுதிக்கு வந்துள்ளது.

அதையும் தாண்டி, இந்த சாம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

569.JPG

இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கம் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே.

இந்த சாம்பல்கள் இந்தியாவை பாதிக்கலாம் என்பதால் ஆகாசா ஏர் இண்டிகோ, கே.எல். எம் ஆகிய விமானங்கள் தங்களது சில விமானங்களை இரத்து செய்துள்ளன.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர்   விமான நிறுவனங்களை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது.

ஒருவேளை விமானங்களில் ஏதேனும் சாம்பல் பாதிப்பு இருந்தாலோ, இருப்பதாகவோ நினைத்தாலோ உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.