Breaking News
பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த சிறப்பு பரிசு!
,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று மாலை சந்தித்து கொண்டனர்.
அப்போது மோடிக்கு டிரம்ப் ஒரு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார்.
டிரம்ப் தன் கைப்பட கையெழுத்திட்ட "திரு. பிரதமர், நீங்கள் சிறந்தவர்(Mr. Prime Minister, you're great)" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 'எங்கள் பயணம் ஒன்றாக(Our Journey Together)' என்ற காபி டேபிள் புத்தகம் வழங்கினார்.
320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 'ஹவுடி மோடி' மற்றும் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
அதில் இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக தங்கள் அன்பை வெளிப்படுத்தியதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.