ஈரானிய கொள்ளை கும்பல் யார்? சென்னையை கலங்கடிக்கும் - சிங்கம் பட பாணியில் அரெஸ்ட்! நள்ளிரவு திக்.. திக்..
மகாராஷ்டிராவைச் ஈரானிய கொள்ளை கும்பல்சேர்ந்த ஜாபர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது சென்னை காவல் ஆணையர் அருண் பொறுப்பேற்ற பிறகு நடந்த 4-ஆவது என்கவுன்ட்டர்.
இவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரானி கொள்ளை கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் எனவும், காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டால் பிணையில் வெளியே எடுக்க வழக்கறிஞர் தயாராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் கைதான இருவரை செயின் பறித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, தரமணி ரயில் நிலையம் அருகே, ஜாபர் குலாம் ஹூசைன் என்ற 26 வயதான கொள்ளையன், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை சுட முயன்றதால், தற்காப்புகாக ஜாபர் மீது திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. குண்டு துளைத்ததில் பலத்த காயமடைந்த கொள்ளையன் ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை காவல் ஆணையரான அருண் பொறுப்பேற்ற பிறகு 4-ஆவது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். அப்போது, ரவுடிகளுக்கு அவர்களது பாணியிலேயே பாடம் எடுப்போம் என அவர் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பின்பு, ரவுடி காக்காதோப்பு பாலாஜி, ரவுடி சீசிங் ராஜா ஆகியோரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின்னர், 4-ஆவது என்கவுன்ட்டராக, செயின் பறிப்பு வழக்கில் சிக்கிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஜாபர் மீது சென்னை தாம்பரம் அருகே செயின் பறித்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், பல்வேறு மாநிலங்களிலும் கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஜாபரை என்கவுன்ட்டர் செய்த திருவான்மியூர் காவல் ஆய்வாளர் முகமது புகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய கொள்ளை கும்பல் யார்?
இதற்கிடையே, செயின் பறிப்பு சம்பவத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜாபர் இரானி கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மக்களை திசை திருப்பி தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவதுதான் இரானி கும்பலின் பாணியாகும். ஈரானை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர். அடிப்படையிலேயே போன்று வலுவான உடல்வாகு கொண்டவர்கள். பெண்களை குறி வைத்து கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவதும் இவர்களது பாணி. சென்னையில் நேற்று அடுத்தடுத்து 7 இடங்களில் செயின் பறிப்பில் இந்த இரானி கும்பல் ஈடுபட்டுள்ளது. நகைகளை 3ஆவது நபரிடம் கொடுத்துவிட்டு ஜாபர் மற்றும் சூரஜ் விமானம் மூலம் தப்ப முயன்ற போது பிடிபட்டனர்.
சிங்கம் பட பாணி : சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நகை கொள்ளையனை சிங்கம் பட பாணியில் காவலர்கள் பிடித்திருக்கின்றனர். சென்னையில் அடுத்தடுத்து நகைகளை பறித்துவிட்டு ஜாபர், சூரஜ் விமான நிலையம் சென்றுள்ளனர். அடையாளம் தெரியாமல் இருக்க சட்டைகளை மாற்றியபோதும் காலணிகளை மாற்றாமல் இருந்துள்ளனர். மேலும், சூரஜ் சென்னை விமான நிலையத்தில் அடுத்து புறப்படும் விமானம் எதுவோ அதற்கு டிக்கெட் தாருங்கள் என கேட்டதால் சந்தேகம் அடைந்துள்ளனர் ஊழியர்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சூரஜை காவல் துறை பிடித்து விசாரித்ததில் பெண்கள் அணியும் நகைகளை அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சூரஜ் போர்டிங்கில் இருந்த நிலையில் ஜாபர் விமானத்தில் ஏறி அமர்ந்திருக்கிறார். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து சென்ற இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி சிங்கம் பட பாணியில் விமானத்திற்குள் ஏறி தப்பியோட இருந்த முக்கிய கொள்ளையனான ஜாபரை கைது செய்துள்ளனர். சிஆர்பிஎஃப் போலீசார் இதற்கு உதவியுள்ளனர். போர்டிங்கில் விமானம் ஏற காத்திருந்த சூரஜையும், விமானத்தில் அமர்ந்திருந்த ஜாபரையும் கொள்ளை நடந்த 3 மணி நேரத்தில் பிடித்த காவல் துறை பிடித்திருக்கிறது. இதே ஜாபர் கடந்த ஓசூரில் ஒரே நேரத்தில் 12 கொள்ளை சம்பவத்தையும், தாம்பரத்தில் ஒரே நேரத்தில் 6க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவத்தையும் செய்துவிட்டு இதேபோல் விமானத்தில் தப்பிச் சென்றுள்ளார்.