Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல - வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் ஜனாதிபதி.

.

சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் அவசியம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நானோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ பலவீனமான சமாதானத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் அதன் ஜனாதிபதியும் பிரான்சின் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.

உக்ரைனை பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி  உக்ரைனின் பாதுகாப்பில் ஐரோப்பா 128 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது ஏனென்றால் ஐரோப்பாவின் கூட்டு பாதுகாப்பின் முன்னணியில் உக்ரைன் உள்ளது என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மக்களின் பெரும் துணிச்சலை நான் போற்றுகின்றேன் பாராட்டுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் வலிமை மிக்கவர்களின் விருப்பத்தை திணிக்க கூடிய,சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை மீறக்கூடிய உலகில் வாழ்வதற்கு எவரும் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.