Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உக்ரைன் மீதான யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம்; டிரம்ப்.

.

  ரஷ்ய - உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே ஜனாதிபதியே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் , மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

சவுதிஅரேபியாவில்,  அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ரஷ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்துள்ளார்.

இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன்.

மேலும் அது சரியான விதத்தில் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தெரிவிக்கின்றார்கள் , நீங்கள் மூன்று வருடமாக இருக்கின்றீர்கள் நீங்கள் இதனை முடித்துவைத்திருக்கவேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.