சடலத்தை மாற்றிய ஹமாஸ்; குற்றம் சுமத்தும் இஸ்ரேல்!.
.

ஹமாஸ் குழு சண்டைநிறுத்த உடன்பாட்டில் பிணையாளிகள் குறித்த நிபந்தனையை மீறியிருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது. ஹமாஸ் ஒப்படைத்த சடலங்களில் ஒன்று பிணையாளியுடையது அல்ல என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
4 இஸ்ரேலிய பிணையாளிகளின் சடலங்களை ஹாமாஸ் நேற்றையதினம் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. அவற்றில் ஒரு சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று.
தாயின் சடலம் இல்லை!
அதோடு குறித்த எந்தவொரு பிணையாளியின் சடலம் இல்லை என்றும் இஸ்ரேல் கூறும் நிலையில், ஹமாஸ் அதற்கு இன்னமும் பதிலளிக்கவில்லை. 2 சடலங்கள் அடையாளங்காணப்பட்டு விவரங்கள் வெளியிடப்பட்டன.
கிவ்விர் பிபாஸ் (Kfir Bibas) எனும் சிசு, அதன் 4 வயதுச் சகோதரர் ஏரியல் (Ariel) என அவை அடையாளம் காணப்பட்டன. எனினும் அவர்களின் தாயாரான 32 வயது ஷிரிபிபாஸ் (Shiri Bibas) சடலம் அவற்றில் இல்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் மீதமுள்ள பிணையாளிகளோடு ஷிரிபிபாஸையும் ஒப்படைக்கும்படி இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் அரபு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் காஸா திட்டத்திற்கு மாற்றாக வேறொரு திட்டம் பற்றி விவாதிக்க இன்று ரியாதில் (Riyadh) அவசரநிலை மாநாட்டில் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.