Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சுவிட்சர்லாந்து எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சபாநாயகரிடம் உறுதியளித்துள்ளது!

,

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட பிரதான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சுவிட்சர்லாந்துத் தூதுவர்,

எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.