Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை; திருமலையில் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..!

,

திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றையதினம்(07) காலை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக உரிய நிர்வாகத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.