தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!
.

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (21) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
கடை ஒன்றில் இருந்தவரை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான 37 வயதுடைய சசிகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் கிரேன்ட்பாஸ் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதற்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர்.
இதனால் பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயகுமார் பிரகாஷ் ஆகியோரே பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அன்மைக் காலங்களில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், அதற்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், சிறிலங்கா இராணுத்திற்கு செந்தமானதாகவும் சிறிலங்கா இராணுவத்தினருமாகவே இருக்கின்றனர். அதுவும் அரசியல் கொலையாளிகளாகவும் சாட்சிகளை அழிக்கும் கூலிக் கொலையாளிகளாகவுமே இருக்கின்றனர்.