Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள், இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி; தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது?

,

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று  பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள அவர்களின் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இதன்போது ரஷ்ய ராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது எனவும் அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா? என்பது தொடர்பிலும்  மரணமடைந்தவர்களின் பட்டியலை வெளியிட முடியுமா எனவும் சிறிதரன் எம்.பி கேள்வி எஎழுப்பினார்.