Breaking News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. திமுக, நாதக உட்பட எத்தனை பேர் மனு தாக்கல் தெரியுமா?
.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 65 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று இறுதி நாளாகும். இதில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமார் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாபெரும் வெற்றியடையும் என்றார்.