12500 ஆண்டுகளுக்கு முன் அழிவடைந்த ஓநாய் இனத்திற்கு புத்துயிர் அளித்த விஞ்ஞானம்
,

சுமார் 12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த Dire Wolf இன ஓநாய்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட வரலாற்று சாதனை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
Colossal Biosciences என்பது அமெரிக்காவில் இயங்கும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமாகும். இதன் தேர்ச்சி பெற்ற விஞ்ஞானிகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
13000 ஆண்டுகள் பழைமையான Dire Wolf இன ஓநாய்களின் பற்கள் மற்றும் 72,000 ஆண்டுகள் பழைமையான அவற்றின் மண்டையோடுகளின் மரபணுக்களை பெற்று DNA மற்றும் குளோனிங் முறைமைகளின் ஊடாக Dire Wolf இன 3 ஓநாய் குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுவொரு மைல்கல் சாதனை என Colossal Biosciences நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Ben Lamm தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் 2 குட்டிகளும் இந்த வருடம் ஒரு குட்டியும் இவ்வாறு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புத்துயிர் பெற்ற 3 ஓநாய் குட்டிகளுக்கும் Romulus, Remus மற்றும் Khaleesi என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதவிர அழிவடைந்துபோன Dodo இன பறவைக்கும் டாஸ்மேனிய புலிக்கும் புத்துயிர் அளிக்க தயாராகிவருவதாக Colossal Biosciences நிறுவனம் அறிவித்துள்ளது.
அழிவடைந்த உயிரினமொன்று புத்துயிர் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.