Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

நவீன உலகில்.. பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக மாறியுள்ளது காசா!

544 நாட்களாக போர் நடைபெற்று வரும் போரில் இதுவரை 50,523 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்!

நவீன உலகில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா மாறியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 544 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 50,523 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1163 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோர் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிரங்களின்படி, 39,384 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருக்கிறார்கள் என்றும், இதில் 17,000 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது. உலகம் முழுவதும் பாலஸ்தீன போர் கடுமையான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த போருக்கு தொடக்க காரணமாக ஹமாஸ் அமைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. தாக்குதல் காரணமாக பதில் தாக்குதலில் இஸ்ரேல் இறங்கியது. ஹமாஸ் அமைப்பினரை பழிவாங்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாயின. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது.

உயிரிழப்பு ஒரு பக்கம் எனில், உயிர் பிழைத்தவர்கள் உணவு, குடிநீர், மருந்துக்காக நீண்ட போராட்டத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். போரில் மருத்துவமனைகள் அழிக்கப்பட்டிருப்பதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. WHO, Red Cross போன்ற அமைப்புகள் காசாவில் உள்ள மக்களுக்கு உதவ விரும்பினாலும், உள்ளே நுழைய இஸ்ரேல் அனுமதி மறுக்கிறது. ஐநா சபை இதனை 'மனிதாபிமான பேரழிவு' என்றே அழைக்கிறது.

காசாவில் 23 லட்சம் மக்கள் மக்கள் தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு மண்டலங்களில் தங்கியிருக்கும் மக்கள் மீது கூட குண்டு வீசப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. போர் நிறுத்தம் பற்றி ஓப்பந்தம் கொண்டுவரப்பட்டாலும் அதை நீட்டிக்க இஸ்ரேல் விரும்பவில்லை. எனவே போர் தொடர்ந்து வருகிறது. இது இப்படியே நீடித்தால் போரில் ஈரானும் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.