Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணத்தில் அதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் வீதி

யாழ்ப்பாணத்தில் அதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதியே இவ்வாறு முழுமையாக இன்று காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில்இ பயணிகள் பேருந்துகள்இ பொதுமக்கள் என பலரும் மிகவும் மகிழ்ச்சியாக இந்த வீதியால் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவில் பங்குபற்றுதலுடன்

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கடந்த 31.01.2025 அன்று நடைபெற்றது.

இதன்போதுஇ அதி உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்த குறித்த வீதியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் ஆறு யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை முன்வைத்தார்.

இந்நிலையில் இன்றையதினம் குறித்த வீதி திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு,

அதிஉயர் பாதுகாப்பு வலயத்தின் அறிவித்தல்.

இந்த வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் வீதியாகும். இந்த வீதியினூடாகப் பயணிக்கும் அனைவரும் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும்.

1.⁠ ⁠வீதி திறக்கப்படும் நேரம் மு.ப 06.00 தொடக்கம் பி.ப 05.00 வரை மாத்திரமே.

2.⁠ ⁠வீதியினுள் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல்இ திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

3.⁠ ⁠வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.

4.⁠ ⁠இந்த வீதியில் நடைபயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

5.⁠ ⁠இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை.

6.⁠ ⁠இந்த வீதியில் செல்லக்கூடிய வேகம் ஆகக்கூடியது 40 கி.மீ மாத்திரமே.

6.⁠ ⁠இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும். 

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுதல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றமாகும்.