Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொலிஸார், அரசியல்வாதிகள் துணை- ஆனந்த விஜேபால!

.

பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.  இன்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பல்வேறு அரச நிறுவனங்களில் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றமை தெளிவாக தெரிகிறது. குறிப்பாக பொலிஸார் இதற்கு உதவிகளை வழங்குகின்றனர். இதுகுறித்து நான் தீவிர அவதானம் செலுத்திள்ளேன். எந்தவொரு விதத்திலும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம்.

இந்த செயல்பாடுகளை பாதாள உலக குழுக்களின் குற்றங்களாகவே நாம் அடையாளம் காண்கிறோம். பாதாள உலகக் குழுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அனைத்து விடயங்களையும் நாம் கூற முடியாது. சில அரசியல்வாதிகளுக்கு இந்தச் செயல்பாடுகளுடன் தொடர்ப்புகள் இருக்கின்றன.புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், பாதாள உலகக் குழுக்களை முற்றாக அழிக்கும் நடவடடிக்களும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.