Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

சுமார் மூன்று மாதங்கள் பொதுப் பணிகளில் இருந்து விலகி இருந்தார்,

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வியாழக்கிழமை (27) கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டமையினால் மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொது நிகழ்வுகள் இரத்து.

இதனையடுத்து வியாழக்கிழமை மதியம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவரது பொது நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தனக்கு ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்ததிலிருந்து, மன்னரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

76 வயதான சார்ள்ஸ், சுமார் மூன்று மாதங்கள் பொதுப் பணிகளில் இருந்து விலகி இருந்தார், ஆனால் அரசாங்க ஆவணங்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் பிரதமரைச் சந்தித்தல் போன்ற அரசுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.

அதேவேளை மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னரும் பிரித்தானிய முடியாட்சியின் மீது சார்ள்ஸின் புற்றுநோய் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.