Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி!

இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். 

இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில்,

இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, 

கொவிட் பெரும் தொற்றின் போதும்,  அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் போதும் இந்திய உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையால் இந்தளவு சீக்கிரம் மீண்டிருக்க முடியாது.

எனவே, எதிர்வரும் நாட்களிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

ஆகவே, இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை விடுத்தார்.  

இதன் பின்னர் டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். 

சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மோடி இதன்போது ஆலோசனை வழங்கினார்.