முறிந்த எலும்பு கூடும்.. கல்லீரல் உறுதி பெறும்... அற்புதமான பிரண்டை.. மூலிகை அதிசயம்.
பிரண்டையிலிருக்கும் சிசஸ் குவாட்ராங்குலரிஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

முறிந்த எலும்புகள் ஒன்றுகூடவும், மூட்டுவீக்கங்கள் குறையவும், பிரண்டை மூலிகை எப்படி பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பிரண்டை சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள் என்னென்ன? பிரண்டையை யாரெல்லாம் தவிர்க்கலாம்? சுருக்கமாக பார்க்கலாம்.
கர்ப்பிணிகளும், சர்க்கரை நோய் உள்ளவர்களும் பிரண்டையை தவிர்க்கலாம்.. ஏனென்றால், பிரண்டையிலிருக்கும் சிசஸ் குவாட்ராங்குலரிஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், பிரண்டை சாப்பிடக்கூடாது,. உதிரப்போக்கு மேலும் அதிகமாகும்.
பிரண்டையின் பயன்கள் ஆனால், பெண்களுக்கு பிரண்டை மிகவும் சத்தான உணவாகும்.. பிரண்டையிலிருந்து 6 ஸ்பூன் சாறு எடுத்து, அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஒரு வார காலம் சாப்பிடுவதால், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.. பிரண்டையில் வைட்டமின் C, E, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு, ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் என ஏகப்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கிறது.. அந்தவகையில், செரிமானம், வயிறு கோளாறுகளை நிவர்த்தி செய்யக்கூடியது இந்த பிரண்டை.. கல்லீரல் சேதத்தை தடுத்து நிறுத்தி, குடற் புழுக்களை அகற்றும் தன்மை கொண்டது. பிரண்டை துவையல் தவிர்க்கக்கூடாது பெரும்பாலும் பிரண்டையில் துவையல் அரைத்து சாப்பிடுவார்கள்.. இதனால் குடலிலுள்ள அழுக்குகள், நச்சுக்கள் வெளியேறிவிடும். குடல் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும். முதுகுவலி, கழுத்து வலி, சுளுக்கு ஏற்பட்டாலோ அல்லது வாயு தொந்தரவுகள் இருந்தாலோ பிரண்டையே மருந்தாகும்.. மூல வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த துவையல் மிகவும் நல்லது..
துவையல் சாப்பிடும்போது, கெட்ட கொழுப்புகளை குறையும்.. ரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்பு நீங்கும். இதனால் உடல் எடையும் குறையும்.. ரத்த அழுத்த நோயால் அவதிப்படுபவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு பிரண்டை.. மூச்சுத்திணறல் இருந்தால் பிரண்டையின் தண்டு, மிளகு சமஅளவு சேர்த்து துவையல் அரைத்து தினமும் 2 வேளை சாப்பிடலாம்.
முறிந்த எலும்புகள் ஒன்றுகூட எலும்பு முறிவு ஏற்பட்டால் அதை சரிசெய்யக்கூடியது பிரண்டை.. உடைந்த மற்றும் முறிந்த எலும்புகளை புதிய திசுக்களை உருவாக்கியே, அவைகளை ஒன்று சேர்த்துவிடுமாம் பிரண்டை. பிரண்டை வேர்களும் மருத்துவ குணம் வாய்ந்தது.. இந்த வேரை சுத்தம் செய்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து பற்று போல போடுவதால், முறிந்த எலும்பும் சீராகும். அல்லது பசும்பாலுடன் இந்த பவுடரை கலந்து குடித்தாலும் உடைந்த எலும்புகள் ஒன்றாகும்.. பிரண்டையின் தண்டுகளையும் வீணாக்காமல் மருந்தாக பயன்படுத்தலாம். இதற்கு தண்டுகளை நன்றாக அலசிவிட்டு சிறிதாக நறுக்கி, நீரிலிட்டு கொதிக்க விட வேண்டும். இந்த ஜூஸ் ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால் எலும்புகள் பலம் பெறும். எலும்புகள் அடர்த்தி எலும்புகளின் அடர்த்தியை மீட்க உதவுகிறது பிரண்டை.. வாயுவால் எலும்பு, நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கி விடுவதால், முதுகுத்தண்டு மற்றும் கழுத்து பகுதிக்கு அவை இறங்கி, பசை போல் அங்கேயே படிந்து வலியை உண்டாக்கிவிடும். இதனால், கழுத்தை கொஞ்சம்கூட திருப்பவோ, குனியவோ முடியாது.
இதுபோன்ற தொந்தரவு இருந்தால், பிஞ்சு பிரண்டையை உலர்த்தி, தூளாக்கி, சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகிவிடும்.. விரைவில் முதுகு வலி மற்றும் கழுத்து வலியும் குணமாகும்