Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஓடுதளத்தில் தீப்பற்றி எரிந்த தென்கொரிய விமானம்.. பயணிகள் பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

.

தென்கொரியாவில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றிய கோர விபத்தில் பலியான பயணிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.தென்கொரியாவில் விமானம் தரையிறங்கியபோது தீப்பற்றிய கோர விபத்தில் பயணிகள் 62 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் என மொத்த 181 பேருடன், தென்கொரியாவின் ஜிஜு நிறுவன பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை தென்கொரியா நோக்கி வந்து கொண்டிருந்தது.தலைநகர் சியோலில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவில், தென்மேற்கு திசையில் அமைந்துள்ள முசான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று பக்கவாட்டு தடுப்பில் வேகமாக மோதியதில் விமானம் தீப்பற்றி எரிந்தது.

தென்கொரிய நேரப்படி இன்று காலை 9:07 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை85 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல பயணிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.