நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி!
.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் மெட்ஹென்ரி (Matt Henry) 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
291 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 29 ஓவர்கள் 4 பந்துகள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பில் Mark Chapman 81 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன மற்றும் எஷான் மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
எவ்வாறாயினும் 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.