Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ ; 31,000 பேரை வெளியேற உத்தரவு

,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மீண்டும் காட்டுத்தீ பரவ துவங்கியதால், 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடல் நீரால் தீயை அணைக்கும் முயற்சி: 

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அண்டை மாகாணங்களில் இருந்து தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் வாயிலாக, கடல் நீரால் தீயை அணைக்கும் முயற்சிகளும் நடந்தன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைக்கும் முயற்சி முன்னேற்றம் அடைந்தது.  

இந்நிலையில் தற்போது, மீண்டும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கே வடக்கே, காட்டுத்தீ பரவ துவங்கி உள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ ; 31,000 பேரை வெளியேற உத்தரவு | Wildfires Again Los Angeles 31000 To Evacuate

சில மணி நேரத்தில் 8,000 ஏக்கருக்கும் (3,200 ஹெக்டேர்) அதிகமான பரப்பளவுக்கு தீ வேகமாக பரவியது. காட்டுத்தீ பரவ துவங்கியதால், 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வசிக்கு மக்களுக்கு, அவசர எச்சரிக்கை விடுத்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.

இது குறித்து, வானிலை ஆய்வாளர் டேனியல் ஸ்வைன் கூறுகையில், காட்டுத்தீ பரவி வருவது மிகவும் கவலைக்குரியது. அதிகமான ஹெலிகாப்டர்கள் உள்ளன. இது தான் நல்ல செய்தி. கெட்ட செய்தி என்னவென்றால், காற்று அதிகமான அளவு வீசும். தெற்கு கலிபோர்னியாவில், எட்டு மாதங்களில் பெரிய மழைப்பொழிவு எதுவும் இல்லை. இதனால் கிராமப்புறங்கள் வறண்டு போகின்றன என கூறியுள்ளார்.