சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்
,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது.
எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
’33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்’ என்று குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த சாந்தன் விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து நோய்வாய்ப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.