Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தமிழ்ப் பெண் அனிதா இந்திரா!

.

சர்வதேச அரங்கில் மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே அடுத்த பிரதமர் ஆவார் என்பதால் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் பிறந்து கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள லிபரல் கட்சியை சேர்ந்த சந்திரா ஆர்யா அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த பிரதமர் போட்டிக்கு மற்றுமொரு இந்தியப் பெண் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவை வெள்ளலூரை பூர்வீகமாக அனிதா இந்திரா என்பவர் போட்டியிடவுள்ளார்.அனிதா இந்திராவின் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் ஆவார். இவர் காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஆவார்.

அனிதா இந்திராவை பொறுத்தவரை, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக மந்திரியாக பணியாற்றியுள்ளார்.