Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

அமெரிக்காவில் பயங்கரம்; நேருக்கு நேர் மோதிய விமானமும் ஹெலிகாப்டரும்

,

 

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சுமார் 64 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க முன்னர் ஹெலிகொப்டர் ஒன்றுடன் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது.

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது.

குறித்த விமானத்தில் 64 பயணிகள் இருந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

5342 என்கிற எண் கொண்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ரீகன் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது நடுவானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதியது.

இதில், விமானமும், ஹெலிகாப்டரும் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பொடோமாக் ஆற்றில் விழுந்தன. அதேவேளை ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

 

வெடித்து சிதறிய  விமானம் : விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்ஏஏ) கூறுகையில், பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 ஜெட் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற ஹெலிகாப்டருடன் மோதியது

இந்த விபத்து தொடர்பாக எஃப்ஏஏ மற்றும் என்டிஎஸ்பி விசாரணை நடத்தும் என்றும் என்டிஎஸ்பி விசாரணையை வழிநடத்தும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்து சேவைகள் துறை தெரிவித்துள்ளதுகுறித்த விபத்து தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்; விபத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒட்டுமொத்த டிரம்ப் நிர்வாகத்தின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

 அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த விமானத்தில் 64 பயணிகள் இருந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

5342 என்கிற எண் கொண்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ரீகன் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது நடுவானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதியது.

இதில், விமானமும், ஹெலிகாப்டரும் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பொடோமாக் ஆற்றில் விழுந்தன. அதேவேளை ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.