Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!ந

நல்லூர் கொடியிறக்கம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (22.08.25)  காலை நடைபெற்றது.

காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன.

நாளைய தினம் சனிக்கிழமை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை (22.08.25) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது.

நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக இடம்பெற்றது.

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்று, அதனை தொடர்ந்து மாலை 04.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று . கொடியிறக்கம் இடம்பெற்றது.

இன்றைய தினம் சனிக்கிழமை (23.08.25)  மாலை நல்லூரானுக்கு திருக்கல்யாணமும் , நாளை ஞாயிற்றுக்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ளது.

அதேவேளை நல்லூர் மகோற்சவ காலத்திற்காக கடந்த 28ஆம் திகதி முதல் நல்லூர் ஆலய சூழலில் உள்ள வீதிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ,நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவர் சாந்தி உற்சவம் நிறைவடைந்ததும் , வீதிகள் திறந்து விடப்படவுள்ளது.