Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான (கா.ஆ.அ.) உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

,

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான (கா.ஆ.அ.) உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் (கா.ஆ.அ.) 2025 ஒக்டோபர் மாதத்தில் ஏற்படக்கூடியதான உறுப்பினர் பதவிக்கான வெற்றிடமொன்றை நிரப்புவதற்காக; 

•⁠  ⁠நிகழ்வு கண்டறிதல் அல்லது நுண்ணாய்வு,

•⁠  ⁠மனிதவுரிமைகள் சட்டம்,

•⁠  ⁠சர்வதேச மனிதாபிமான சட்டம்,

•⁠  ⁠மனிதாபிமான பதிலிறுப்பு

என்பவற்றின் முன்னனுபவம் கொண்டவர்களிடமிருந்தும் அல்லது, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்கு இயைபான ஏனைய தகைமைகளை உடையவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பாராளுமன்ற இணையத்தளத்தில் (www.parliament.lk) ‘கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை - அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, எனும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர் நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.