Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்”

தமிழினம் பட்ட அவலங்களையும், சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து கண்காட்சி !

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் ,  பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன் , அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

 ” நினைவாயுதம்” 
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.  . பல்கலை பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
தமிழினம் பட்ட அவலங்களையும், சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும், பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியை காண்பித்து, தமிழினத்தின் அவலங்களை பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என மாணவர்கள் கோரியுள்ளனர்.
 "குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி" 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் "குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி" எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று புதன்கிழமை (14)  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர்.

20250514_130923.jpg

20250514_130909.jpg