Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் வீதியில் வீசப்பட்ட கரு : பொலிஸார் தீவிர விசாரணை.

,

யாழ்ப்பாணம் நகரின் மையப்பகுதியில் வீதியோரத்தில் கருச்சிதைவு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் நேற்று  காலை பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். அவர் அவ்விடத்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில், சுமார் 6 முதல் 7 மாதங்கள் மதிக்கத்தக்க கரு ஒன்று வீதியில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
இது குறித்து உடனடியாக யாழ்ப்பாண  பொலிஸாருக்கு ருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீதியில் கிடந்த கருவினை ஒரு கடதாசிப் பெட்டியால் மூடி பாதுகாத்ததுடன், அவ்விடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். 
அப்பகுதியில் நடமாடிய அந்தப் பெண், ஏதேனும் ஒரு இடத்தில் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர், சிதைந்த அந்தப் பகுதியினை வீதியில் வீசிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்யவும், சந்தேகத்திற்கு இடமான அந்தப் பெண்ணைக் கண்டறியவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.