Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை கடல் எல்லைக்குள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நுழைந்திருந்தால் அதைக் கண்டறியும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லையா? -சஜித் பிரேமதாச

எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டைமண்ட் போன்ற முந்தைய கடல்சார் அனர்த்தங்களைப் போன்று, மூழ்கிய ஈரானியக் கப்பல் சுற்றுச்சூழல் பேரழிவைத் தூண்டுவதற்கு இடமளிக்க வேண்டாம்

இலங்கையிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள எமது கடல் எல்லைக்குள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நுழைந்திருந்தால் அதைக் கண்டறியும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லையா? எங்களிடம் மேற்பரப்பு ரேடார்கள் இல்லையா? நீருக்கடியில் சோனார் நெட்வொர்க்குகள் இல்லையா? செயற்கைக்கோள் கண்காணிப்பு இல்லையா? சஜித் பிரேமதாச சரமாரியாக கேள்வி?
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அரசாங்கத்திற்குத் தெரியாமல் எவ்வாறு நுழைய முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவசரகால நிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பிரேமதாச, தேசிய பாதுகாப்பு உச்சகட்டத்தில் இருப்பதாகக் கூறும் அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை அறியாமல் இருந்தது கவலைக்குரியது என்றார்.
தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி அவசரகால சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எவ்வித கண்டறிதலும் இன்றி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கை கடல் பகுதியில் எவ்வாறு இயங்க முடிந்தது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என அவர் கூறினார்.

“இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் உள்ள எமது கடல் எல்லைக்குள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நுழைந்திருந்தால், அதைக் கண்டறியும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லையா? எங்களிடம் மேற்பரப்பு ரேடார்கள் இல்லையா? சோனோபுய்கள் அல்லது நீருக்கடியில் சோனார் நெட்வொர்க்குகள் இல்லையா? எங்களிடம் இழுத்துச் செல்லப்படும் சோனார்கள் அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பு இல்லையா? எமது தேசிய பாதுகாப்பு உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில், எமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அதன் காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவே எமது தேசிய பாதுகாப்பின் மட்டத்தைக் காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் தாக்கப்பட்ட ஈரானிய கடற்படைக் கப்பலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது ஈரானிய கப்பலில் இருந்து 208 மாலுமிகள் மீட்கப்படுவதற்கு முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைப் பாதுகாப்பதற்கு என்னென்ன இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், இந்தத் தாக்குதலால் சர்வதேச கடல்சார் சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் இலங்கையில் எரிபொருள், எரிவாயு, மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்படும் இடையூறுகளால் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளைக் குறைக்க, இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து உடனடியாக எரிபொருளைப் கொள்வனவு செய்யும் வழிகளை ஆராயுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டைமண்ட் போன்ற முந்தைய கடல்சார் அனர்த்தங்களைப் போன்று, மூழ்கிய ஈரானியக் கப்பல் சுற்றுச்சூழல் பேரழிவைத் தூண்டுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று எச்சரித்த அவர், சாத்தியமான கடல் மாசுபாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் மத்திய கிழக்கில் உள்ள சுமார் பத்து இலட்சம் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். அவசரகாலச் சட்டங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.