Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பரில் நீக்கப்படும்!

,

இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார  தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் தெரிவித்துள்ளார்.

“1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.

அந்தவகையில் செப்டம்பர் மாதமளவில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்து சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றை பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பழைய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும்.
அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்குரிய சட்ட பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும்.” – என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.