Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் செயல் திட்டம்!

குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இவ்வாண்டு மேலும் விரிவாக்கி வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இவ்வாண்டு மேலும் விரிவாக்கி வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று  (20.) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு இறுதியில் தெல்லிப்பழை மானிடம் அறக்கட்டளையின் கோரிக்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட குளங்களைத் தூர்வாருவதற்கான செயற்றிட்டத்தை, இவ்வாண்டும் தொடர்ச்சியாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குளங்களைத் தூர்வாருவதன் ஊடாக வெள்ளப்பெருக்கைக் குறைக்க முடியும் எனவும், இதன்போது பெறப்படும் மண்ணை உள்ளூராட்சி மன்றங்களிடம் கையளிப்பதன் மூலம், அவர்கள் அதனைத் தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மானிடம் அறக்கட்டளை சார்பில் கருத்துத் தெரிவித்த மருத்துவர் பரா.நந்தகுமார், கடந்த ஆண்டு உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குளங்கள், அப்பகுதி விவசாய அமைப்புக்களின் நிதிப் பங்களிப்புடன் வெற்றிகரமாகத் தூர்வாரப்பட்டதாகவும், அதன்போது எதிர்கொண்ட சவால்களைக் கருத்தில் கொண்டு இம்முறை செயற்றிட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 116 குளங்கள் தூர்வாருவதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீர்வளச் சபையின் உதவியுடன் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு தூரம் ஆழப்படுத்தப்பட வேண்டும் என்ற வரைபடம் தயாரிக்கப்பட்டு, தலைமையகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்டக் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தனது கருத்தில், ஏனைய மாகாணங்களில் தனியாரின் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி மன்றங்கள் பல்வேறு வேலைத் திட்டங்களைத் திறம்பட முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்களுக்குச் சொந்தமில்லாத குளங்களை உள்ளூராட்சி மன்றங்களிடம் கையளிக்க வேண்டும் எனவும், அதன்மூலம் மன்றங்கள் தமது எல்லைக்குள் இயங்கும் வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து 'நிறுவன சமூகப் பொறுப்பு' நிதியைப் பெற்று, அக்குளங்களைப் பராமரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அவற்றைத் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதன் ஊடாகச் சபைகளுக்கான வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என அவர் யோசனை தெரிவித்தார்.

இந்த ஆலோசனைகளுக்கு அமைவாகத் திட்டங்களைத் தயாரிக்குமாறும், குளங்களில் நீர் வற்றிய பின்னர் எதிர்வரும் மே மாதம் அளவில் தூர்வாரும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் கௌரவ பிரதி மேயர், மாநகர சபை ஆணையாளர், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், யாழ். மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.