Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்; பிரிட்டன் அரசு எச்சரிக்கை!

ஆா்ப்பாட்டம் நடத்தும் உரிமை நாட்டின் அடிப்படை சுதந்திர உரிமையாகும். இருப்பினும், இந்தச் சுதந்திர உரிமையை மக்கள் பயமின்றி வாழ்வதற்கான உரிமையுடன் சமமாகக் கருத வேண்டும் - ஷாபனா மஹ்மூத்.

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் ஆா்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான அதிகாரத்தை பிரிட்டன் காவல் துறை பயன்படுத்த வேண்டியிருக்கும் என அரசு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.
இஸ்ரேல்-காஸா போரின் தொடக்கத்திலிருந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரிட்டனில் ஆா்ப்பாட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பிரிட்டன் ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு தொடா்புடைய தளங்களைத் சேதப்படுத்திய ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ என்ற அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது சட்டவிரோதமானது எனவும் அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக மத்திய லண்டனின் டிராஃபல்கா் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோா் சனிக்கிழமை கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இனப் படுகொலையை எதிா்ப்பதாகவும், பாலஸ்தீன் ஆக்ஷன் அமைப்பை ஆதரிப்பதாகவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அவா்களில் 488 போ் கைது செய்யப்பட்டனா்.
பாலஸ்தீன் ஆக்ஷன் அமைப்பு கடந்த ஜூலையில் தடைசெய்யப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோரை பிரிட்டன் காவல் துறை கைது செய்துள்ளது.

130-க்கும் அதிகமானோா் மீது பயங்கரவாத குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பேரணிகள் மற்றும் ஆா்ப்பாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும்போது தொடா்ச்சியான போராட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறை பரிசீலித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் உள்நாட்டு அமைச்சா் ஷாபனா மஹ்மூத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆா்ப்பாட்டம் நடத்தும் உரிமை நாட்டின் அடிப்படை சுதந்திர உரிமையாகும். இருப்பினும், இந்தச் சுதந்திர உரிமையை மக்கள் பயமின்றி வாழ்வதற்கான உரிமையுடன் சமமாகக் கருத வேண்டும்.
பெரிய அளவில் தொடா்ச்சியாக நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள், நாட்டில் உள்ள சில மக்களிடம் குறிப்பாக மதக் குழுவினரிடம் பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா். ஆா்ப்பாட்டம் பெருமளவில் அமைதியாக நடைபெற்றாலும், அவை தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என சில யூதா்கள் கூறுகின்றனா்.

முன்னதாக, மான்செஸ்டரில் உள்ள யூத ஆலயம் அருகே கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 2 யூதா்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, வார இறுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என ஆா்ப்பாட்டக்காரா்களிடம் பிரதமா் கியா் ஸ்டாா்மா் உள்ளிட்ட தலைவா்கள் மற்றும் காவல் துறையினா் வலியுறுத்தியிருந்தனா்.