Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய செயலாளர்கள்.

15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 8 பிரதேச செயலார்கள் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 8 பிரதேச செயலார்கள் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதற்கமைய கோப்பாய் பிரதேச செயலாளராக தற்போதைய  கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி நியமிக்கப்பட்டவுள்ளார்.

உடுவில் பிரதேச செயலாளராக பிறேமினி பொன்னம்பலமும்,  பருத்தித்துறை பிரதேச செயலாளராக  ந.திருலிங்கநாதன், சாவகச்சேரி பிரதேச செயலாளராக பி.சத்தியசோதி, நெடுந்தீவு பிரதேச செயலாளராக பிரபாகரன்  நியமிக்கப்படுகின்றனர்

இதேபோன்று  சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக  கு.பிரபாகரமூர்த்தியும்,  மருதங்கேணி பிரதேச செயலாளராக உசா சுபலிங்கம், வேலணை பிரதேச செயலாளராக ரி.அகிலன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட 
மேலதிக அரச அதிபர் காணி பதவியில் தற்போதைய உடுவில் பிரதேச செயலாளர்  பா.ஜெயகரன் நியமிக்கப்படுவதோடு  சமுர்த்தி பணிப்பாளராக ஸ்ரீவர்ணன் நியமிக்கப்படுகின்றார்.

இந்த நியமனங்களிற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை  அமைச்சு, பணிப்பாளர் இலங்கை நிர்வாகசேவைக்கு  அனுப்பி வைக்கப்பட்டு அதன்   பிரதிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் மாகாண பிரதம செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.