Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

2027 பிரெஞ்சு அதிபர் தேர்தல்: 500 பிரதிநிதிகளின் ஆதரவை எளிதில் பெறுவோம் - 'தேசிய அணி' கட்சி உறுதி!

ஐரோப்பிய நாடாளுமன்ற உதவியாளர்கள் தொடர்பான நிதிமுறைகேடு வழக்கில், கட்சியின் முக்கியத் தலைவரான மரின் லு பென் (Marine Le Pen) தேர்தலில் போட்டியிடத் தடை?

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற மாபெரும் வெற்றியின் மூலம், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேவையான 500 மக்கள் பிரதிநிதிகளின் (Parrainages) ஆதரவுக் கையொப்பங்களை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று பிரான்சின் 'தேசிய அணி' (Rassemblement national - RN) கட்சி உறுதியாக நம்புகிறது.

பிரான்சின் முன்னணி நாளிதழான 'லு ஃபிகாரோ'வுக்கு (Le Figaro) பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா (Jordan Bardella), இது குறித்துத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். கடந்த தேர்தல்களில் 13 நகரங்களை மட்டுமே நிர்வகித்து வந்த இக்கட்சி, தற்போது 70 நகரங்களைக் கைப்பற்றி மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த நகரத் தந்தை (மேயர்)களுடன், சுமார் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பிராந்திய, மாவட்டக் குழு உறுப்பினர்களின் ஆதரவும் இக்கட்சிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மேலவைத் (செனட்) தேர்தலில், குறைந்தபட்சம் 10 இடங்களை வென்று, அங்குத் தங்களுக்கென ஒரு தனிக்குழுவை உருவாக்கவும் இக்கட்சி திட்டமிட்டுள்ளது.  ஆதரவுக் கையொப்பங்களைத் தேடி அலையும் பழைய நிலையிலிருந்து மாறி, இப்போது தேர்தல் பரப்புரைத் திட்டங்களில் முழுக் கவனம் செலுத்தவுள்ளதாக ஜோர்டான் பார்டெல்லா தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உதவியாளர்கள் தொடர்பான நிதிமுறைகேடு வழக்கில், கட்சியின் முக்கியத் தலைவரான மரின் லு  பென் (Marine Le Pen) தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக ஜோர்டான் பார்டெல்லாவே அதிபர் வேட்பாளராகக் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மரின் லெ பென் மீதான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. "இந்தச் சவாலான சூழலிலும், எங்கள் தேர்தல் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன; யார் வேட்பாளராக இருந்தாலும் அதற்கேற்ப எங்கள் திட்டங்கள் தயாராக உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல்களில் 'குடியரசுக் கட்சி' (Les Républicains) போன்ற மற்ற வலதுசாரி அமைப்புகளுடன் இணைய எடுத்த முயற்சி தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய பார்டெல்லா, "இன்றைய பிரான்சில் உண்மையான வலதுசாரி என்ற ஒன்றே இல்லை," என்று கடுமையாக விமர்சித்தார். நீம்ஸ் (Nîmes), மார்சேய் (Marseille) போன்ற முக்கிய நகரங்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றதற்கு மற்ற வலதுசாரித் தலைவர்களின் பிடிவாதமான செயல்பாடுகளே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

- சிவா சின்னப்பொடி