Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

இராணுவத்தினால் டக்ளஸ் தேவாநந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதுஷிடம் ?

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளார். 
அவரது உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவத்தினால் டக்ளஸ் தேவாநந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதுஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உரிய பதில் வழங்க தவறியமை தொடர்பில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டிருந்தார். 
அவர் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.