சுகாதார சீர்கேடு – உணவகத்திற்கு ரூ.50,000 தண்டத்துடன் சீல் வைப்பு...!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகமொன்றுக்கு ரூ. 50,000 அபராதத்துடன் சீல் வைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து 04.11.2025 அன்று பல உணவகங்களை பரிசோதனை செய்தபோது, விசுவமடு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் ஒரு உணவகம் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
குறித்த உணவகத்திற்கு முன்னரும் பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக பொது சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு பரிசோதகர்களாலும் கடை உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07.11.2025) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான், கடை உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததுடன், குறைபாடுகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை உணவகத்தை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் உடனடியாக சீல் வைத்து மூடப்பட்டது.


