Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகம் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் கடல்சார் கைத்தொழில் துறையின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகம் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் தாம் சார்ந்த துறைகள் தொடர்பான வரவு செலவுத்திட்ட பரிந்துரைகளை முன்வைத்து, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.

மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் கடல்சார் கைத்தொழில் துறையின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 
இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதில் கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறையின் பங்களிப்பு குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
தற்போது செயலிழந்துள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருவாயை ஈட்டுவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.
 
உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமும் போட்டி அடிப்படையிலான சேவைகளை வழங்குவதன் மூலமும் உலகளாவிய கடல்சார் வணிகத்தில் இலங்கை கணிசமான பங்கை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோக துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.