Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நல்லூர் கந்தசுவாமியார் கோவிலின் மகோற்சவம் காலை (29) பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

,

வரலாற்று பெருமைமிகு நல்லூர் கந்தசுவாமியார் பெருங்கோவிலின் இவ்வாண்டு பெருமகோற்சவம் நாளை காலை (29) பகல்  10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 27 தினங்கள் நடைபெறவுள்ளது.

இன்று (28) காலை நல்லூர் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தை வந்தடைந்தது.
கல்வியங்காடு நகரில் வசிக்கும் செங்குந்த பரம்பரை வழிவந்தோரால் ஆண்டுதோறும் நல்லைக் கந்தனுக்கான கொடிச்சீலை வேல்மடம் ஆலயத்தில் இருந்து சிறிய தேர் மூலம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் ஒப்படைப்பது பல தலமுறைகள் தவறாது  சிறப்பாக நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மாலை, வருடாந்த திருவிழாவுக்கான பூர்வாங்க கிரியைகளுடன் வைரவர் சாந்தி விசேட பூஜைகளுடன் நடைபெற்று நல்லூர் திருவீதியில் வைரவர் எழுந்தருளினார்.