Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல்!

14 பிரதேச செயளாலர் பிரிவில் உள்ள தனித்துவமான சுற்றுலாத் தலங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக நவீன மயப்படுத்தல்!

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் புத்திக்க ஹேமவசம் அவர்களின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் அண்மையில் (18) இடம் பெற்றது.

மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயளாலர் பிரிவில் உள்ள தனித்துவமான சுற்றுலாத் தலங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சமூக மட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் உள்ளூர் மட்ட விமான சேவைகளை மீள் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலானது இடம் பெறவுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக இதன் போது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்ஜினி முகுத்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரி.நிர்மலன், வி.நவநீதன், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், கிழக்குமாகண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் சுரேஷ் ரொபர்ட் என பலர் கலந்து கொண்டனர்.