Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

யாழ். மத்திய கல்லூரி - சென்ஜோன்ஸ் கல்லூரி 119 ஆவது ஆண்டாக நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி வெற்றி!

மத்திய கல்லூரி அணி 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 250 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி

யாழ். மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் 119 ஆவது ஆண்டாக நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 
யாழ். மத்திய கல்லூரியில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமான போட்டி மூன்றாவது நாளாக இன்று (07) இடம்பெற்றது. அதில் மூன்று விக்கெட்டுகளால் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 

சென்.ஜோன்ஸ்கல்லூரி முதல் இனிங்ஸில் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 95 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 
மீண்டும் இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தன. இந்நிலையில் 248 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த மத்திய கல்லூரி அணி 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 250 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது.