Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இன்டர்போல் இதுவரை வெளியிட்ட 6,484 சிவப்பு அறிவிப்புகளில், ஆறு பேர் மாத்திரமே இலங்கையர்கள்.

சிவப்பு அறிவிப்பு என்பது கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை அல்ல - இன்டர்போலின் இணையதளம்

சுமார் நூறு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் குறிப்பிடும் சிவப்பு அறிவிப்புகளை, இன்டர்போல் பகிரங்கப்படுத்தியுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கை உட்பட 196 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இன்டர்போ ல் எனப்படும் சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பால் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
“நாட்டிற்கு வெளியே, தலைமறைவாக இருக்கும் ஏராளமான குற்றவாளிகளை, குறிப்பாக வெளிநாட்டிலிருந்துகொண்டு ஒன்றிணைக்கப்பட்ட குற்றங்களை செய்பவர்களை, இப்போது நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்காக 95 சிவப்பு அறிவிப்புகளை வெளியிட நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் FUK வூட்லர் கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இன்டர்போல் இதுவரை வெளியிட்ட 6,484 சிவப்பு அறிவிப்புகளில், ஆறு பேர் மாத்திரமே இலங்கையர்கள்.
“இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு என்பது, சர்வதேச அளவில் தேடப்படும் நாடு கடத்தல், சரணடைதல்  அல்லது கைது செய்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கைது செய்து, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தக் கோரி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்படும் ஒரு சர்வதேச எச்சரிக்கையாகும். சிவப்பு அறிவிப்பு என்பது கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை அல்ல,” என இன்டர்போலின் இணையதளம் கூறுகிறது.