Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் 30 துப்பாக்கிகள் வரையில் மீட்கப்பட்டுள்ளது.

.

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் 30 துப்பாக்கிகள் வரையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதை அடுத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தலைமையில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது 30 T-56 ரக துப்பாக்கிகளும், அவற்றிற்கு பயன்படுத்தப்படும் 5,000 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.