Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள்!

,

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

 
பலாலி பகுதியில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி அப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாத நிலையில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
 
குறித்த வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

 
மேலும் தெரிவிக்கையில்,
 
இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் வந்து வழிபட தற்காலிகமாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையூடாக சென்று அம்மனை வழிபட முடியும். விரைவில் ஆலயத்திற்கு செல்லும் வீதி விடுவிக்கப்படும்.
 
அதேவேளை பலாலி கிழக்கு பகுதியை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவித்து , காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
 
இராணுவத்தினரும் அதற்கான நல்லெண்ண சமிக்சைகளை காட்டியுள்ளனர்.
 
தற்போது இப்பிரதேசம் காடுகளாக காணப்படுகிறது. விரைவில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு செந்தழிப்பன பிரதேசமாக மாறும் என தெரிவித்தார்.