Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் இவர்களை ஒழித்துக்கட்ட விரும்பியது, ஆனால் அவர்களும் ஒழிக்கப்பட்டால் பேசுவதற்கு வேறு தலைமைகள் இல்லை!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஈரானிய பிரதிநிதிகள் மிகவும் விசித்திரமானவர்கள்,  அவர்கள் எங்களிடம் ஒப்பந்தம் செய்ய கெஞ்சுகிறார்கள் . 

அவர்கள் அவ்வாறு செய்வதில் ஆச்சரியம் இல்லை ஏனெனில் அவர்கள் இராணுவ ரீதியாக முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் முன்னேற வாய்ப்பே இல்லை.
ஆனால்  அவர்கள் வெளியில்  ‘நாங்கள் உங்கள் முன்மொழிவை மட்டும் பார்க்கிறோம்’ என்று கூறுகிறார்கள். இது தவறு! அவர்கள் விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும். இல்லையெனில் பின்னர் மீண்டு வர முடியாத நிலை உருவாகும். 

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஈரான்  நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோரைத் தாக்க வேண்டாம் என இஸ்ரேலை வலியுறுத்துமாறு அமெரிக்காவிடம்  பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. 
அதை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் அவர்களைத் தனது தாக்குதல் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக ரொய்ட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இவர்களை ஒழித்துக்கட்ட  விரும்பியது, ஆனால் அவர்களும் ஒழிக்கப்பட்டால் பேசுவதற்கு வேறு தலைமைகள்  இல்லை என்பதை  பாகிஸ்தான்  அமெரிக்காவிடம்  குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி Alireza Tangsiri உயிரிழந்துள்ளார் என  'ஜெருசலேம் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படையே (IDF) காரணம் என்பதை இஸ்ரேலிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.