Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழர் தேசங்கள் தமிழ் தரப்பினரிடமே இருக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் - சுமந்திரன்.

தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில் வலிதாக்கி எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.

தமிழர் தேசங்கள் தமிழ் தரப்பினரிடமே இருக்க வேண்டும்  என்பதில்  மக்கள் உறுதியாக இருக்கின்றனர் - சுமந்திரன்.
பிரிந்து நின்று எதிர்கொள்வதே உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்களின் பிரதினிதித்துவத்தின் அதிகரிபுக்கும் இருப்புக்கும் வலிமை தரும் என்று அன்று நான் கூறுயது இன்று நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (07.05.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் - 
தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில் வலிதாக்கி எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.
மாற்றம் என்ற அலைக்குள் மக்கள் அள்ழுண்டு விடுவர் என பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தசூழலில் நாம் இம்முறை 58 சபைகளில் போட்டியிட்டு 40 சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் பெருவெற்றி பெற்றுள்ளோம். 

இந்த வெற்றியானது தமிழ் தேசியத்தின்பால் மக்கள் கொண்டுள்ள நேசத்தை காட்டுகின்றது.
இந்நேரம் பல சபைகளில் ஆட்சியமைக்கும் தரப்பாக நாம் இருந்தாலும் அதற்கான பெரும்பான்மை பலத்தை சக தமிழ் கட்சிகள் வழங்கவேண்டிய அல்லது ஆதரவு கோர வேண்டிய தேவையும் இருக்கின்றது.
காலச்சூழலின் நிலலையை உணர்ந்து சக தமிழ் கட்சிகள் அதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
எனவே தமிழ் மக்களின் தேசங்கள் தமிழ் தரப்பினரிடமே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உறுதியாகவே இருக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.