Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குச்சவெளி பிரதேச சபை ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு!

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகப் போவதில்லை

முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து குச்சவெளி பிரதேச சபையை ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் குச்சவெளி பிரதேச சபையை இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதில் பாரிய இழுபறி நிலை தோன்றியுள்ளது.

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் தமிழரசுக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சில நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலை தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. 

குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வது என்று, மூதூர் பிரதேச சபையின் முதல் இரண்டு வருடங்களை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப- தவிசாளர் பதவியை வழங்குவது என்றும் இறுதி இரண்டு வருடங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப- தவிசாளர் பதவியையும் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.

அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்களை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப -தவிசாளர் பதவியை வழங்குவது என்றும், இறுதி இரண்டு வருடங்களுக்கு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப- தவிசாளர் பதவியையும் வழங்குவது என்றும் இணங்கியே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர். 

இந்நிலையில், குச்சவெளி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகப் போவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து செவ்வாய்க்கிழமை (27) கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை .