Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பதவியை இழந்தார்!

புதிய நீதிவான் ஒருவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம்

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்..!
மல்லாகம் நீதிவான்  நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி  ஜெகநாதனுக்கெதிராக  மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாடு தொடர்பாக மல்லாகம்  சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை...!
மல்லாகம் நீதிவான்  நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி  ஜெகநாதனுக்கெதிராக  மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 23.09.2025  அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான்,  நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து குறித்த நீதிவான் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தினை சமர்ப்பித்த வேளையில் உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் 23.09.2025  இலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
மேலும் இன்றைய தினம் (24.09.2025) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களைப் பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் புதிய நீதிவான் ஒருவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் தெரிவித்திருந்தார்.