Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். 
இன்று (19) தமது 66-வது பிறந்தநாளைக் அவர் கொண்டாடும் நிலையில், அவரது கைது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது முன்னாள் இளவரசர் அண்ட்ரூ தான் என்பதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து, பெர்க்சையர் மற்றும் நோர்போக் பகுதிகளில் உள்ள அவரது இல்லங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
நோர்போக்கில் உள்ள 'சாண்ட்ரிங்ஹாம்' எஸ்டேட்டிற்கு பொலிஸார் செல்லும் காட்சிகளும் வௌியாகியுள்ளன. 

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் நடந்து வந்தன. 
2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக அண்ட்ரூ பணியாற்றியபோது, அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.