ஹோர்முஸ் நீரிணையில் 'எதிரி' கப்பல்களைத் தடுப்பது ஈரானின் சட்டபூர்வமான உரிமை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!
ஹோர்முஸ் நீரிணையில் 'எதிரி' கப்பல்களைத் தடுப்பது ஈரானின் சட்டபூர்வமான உரிமை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸூடுடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இதனை தெரிவித்துள்ளார். ஒரு கடற்கரை நாடு என்ற அடிப்படையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எதிரிக் கப்பல்களைத் தடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு உண்டு.
இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் 'சட்டவிரோத ஆக்கிரமிப்பு' நடவடிக்கைகளே காரணம்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும். ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்படவில்லை. சில நட்பு நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நீரிணையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளின் துறைமுகங்களை நோக்கிச் சென்ற கப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
வெளிநாடுகளில் பணியாற்றும் மாலுமிகள் அனுப்பும் பணத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தெற்காசியக் குடும்பங்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளன.
பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான தெற்காசியத் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். இது அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவித் தொழிலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. கடல் மார்க்கமாகப் பயணிக்கும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக நாடுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


