Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தடுப்புச் சட்டத்தில் இளைஞன் கைதான விவகாரம் : நாமல் எழுப்பிய கேள்வி?

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளம் கலைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

தடுப்புச் சட்டத்தில் இளைஞன் கைதான விவகாரம் : நாமல் எழுப்பிய கேள்வி?
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்த கடுமையான கவலைகளை மீண்டும் எழுப்புகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு ராப் பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளம் கலைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குறித்த தொடர்பான பாடல்களைப் பயன்படுத்தி
இசையும் கலை வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களாகக் கருதப்படும் நிலையில், சமீபத்திய உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது NPP அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பயன்படுத்திப் பகிர்ந்தபோது ஏன் இதே தரநிலைகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாடல் என்பது ஒரு கலை வடிவம். கலை மூலமாக மக்கள் தங்களுடைய வரலாறு, துன்பங்கள், துயரங்கள், வலிகள், போராட்டங்கள், வெற்றிகள் மற்றும் பெருமைக்குரிய தருணங்களை வெளிப்படுத்துகின்றனர். அதனால்தான் இலக்கியமும் இசையும் மக்களின் கண்ணாடி என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரு சமூகத்தின் அனுபவங்கள், உணர்வுகள் மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கின்றன.

இத்தகைய வெளிப்பாடுகளை வெளிப்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டு, ஒரு மக்களின் வரலாறையும் அனுபவங்களையும் பாடலாகப் பாடுவது பயங்கரவாதம் அல்லது தூண்டுதல் எனக் குற்றம் சாட்டப்படுமானால், அது அந்த நாட்டிற்கே அவமானமாகும். இவைதான்  ஒரு நாட்டை அழிப்பதல்ல. இவைதான் ஒரு நாட்டைப் பிரிப்பதுமல்ல. குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் புரிபவர்கள் தான் ஒரு நாட்டை அழிக்கின்றனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து சட்டவிரோதமாக புத்தர் சிலைகளை நிறுவுபவர்கள் தான் பிரிவினையையும் பதற்றத்தையும் உருவாக்குகின்றனர். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமமான நீதியையும் உரிமைகளையும் வழங்காமல், இருவேறு அளவுகோல்களைப் பயன்படுத்தும் அரசாங்கங்கள் தான் பிரிவினையையும் மனக்கசப்பையும் வளர்க்கின்றன.

ஒரு நாடு வலுப்பெறுவது நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் தங்களுடைய வரலாறையும் அடையாளத்தையும் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையின் மூலமே அன்றி, கலைஞர்களின் குரல்களை  ஒடுக்குவதால் அல்ல.